மின்னல் பண்பலை ஏற்பாட்டில் தித்திக்கும் பொங்கல் விழா பூச்சோங், Batu 14 தமிழ் பள்ளியில் நடைபெற்றது. காலை மணி ஏழு தொடங்கி பொங்கல் வைக்கும் போட்டி, சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, உரி அடிக்கும் போட்டி, தோரணம் பின்னும் போட்டி, பூ தொடுக்கும் போட்டி என பல போட்டிகளில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் பங்குப் பெற்றனர். அது மட்டுமல்லாமல் நமது பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், நெருப்பு கோலாட்டம், தலையாட்டி பொம்மை, மயிலாட்டம், பொய்கால் குதிரை, புலியாட்டம் இவற்றோடு உருமி மேளம் என விழாக்கோலம் பூண்டது பூச்சோங் Batu 14 தமிழ் பள்ளி வளாகம்.


இவ்விழாவில் 51 குழுவினர் பொங்கல் வைக்கும் போட்டியில் கலந்துக் கொண்டனர். போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகளும் வழங்கப்பட்டன. தொடர்பு பல்லூடக அமைச்சர் மாண்புமிகு கோபிந் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். தித்திக்கும் பொங்கல் வைத்து, உரி அடிக்கும் போட்டி நிகழ்ச்சியிலும் கலந்து சிறப்பித்தார். கலாச்சாரமும் பாரம்பரியமும் நிறைந்த இப்பொங்கல் நிகழ்ச்சியை ஒற்றுமையாக பல்வேறு இன மக்கள் கொண்டாடி மகிழ்வது பெருமையாக உள்ளது, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மின்னல் பண்பலையை பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் அவரோடு பல பிரமுகர்களும் கலந்துக் கொண்டு மேலும் கொண்டாட்டம் உற்சாக நடைபெற்றது.

எம்.ஜி.ஆர் சிலம்ப கழக மாணவர்களின் சிலம்பாட்ட படைப்பும்,பூச்சோங் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களின் பரத நடனமும் சிம்பாங் லீமா மாணவர்களின் கலாச்சார நடனமும் வருகையாளர்கள் கவர்ந்தது. அதே வேளையில், பாரம்பரிய கிராமிய ஆடல் பாடல் என நம் நாட்டின் பிரபலமான உள்ளூர் கலைஞர்களான லோகேஷ்வதன், கே.ஜே பாபு, தாச்சாயிணி, T.M.S சிவகாந்தன், ஹேமா, ரோஸ் விரோனிக்கா, “ஊரேல்லாம் பாடல் புகழ் சதிஸ் நாயுடு இவர்களின் அமர்களமான படைப்புகளை மின்னல் பண்பலை நேயர்கள் கண்டுகளித்தனர்.

காலை ஏழு மணி தொடங்கி பிறபகல் 2.00 மணி நடைபெற்ற மின்னல் பண்பலையின் தித்திக்கும் பொங்கல் விழாவில் கலந்துக் கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பினர்களுக்கும் மின்னல் பண்பலையின் நிர்வாகி திருமதி சுமதி நன்றியைத் தெரிவித்து கொண்டார். மாணவர்களுக்கும் நம் பாரம்பரிய நடனங்கள் போட்டிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சியை பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார். விரைவில் வெளிவரவிருக்கும் நம் நாட்டு திரைப்படங்கள் “உனக்காதானே”, “சந்தித்த நாள் முதல்”, “அதிகாரி” திரைப்பட குழுவினர்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் திரைப்படங்களை பற்றி நேயர்களிடம் பகிர்ந்து கொண்டனர். பேன்ஜீ, ஷீலா பிரவினா, பாலகணபதி, கர்ணன் ஜி கிராக், கல்பனா, விகர்ன், நந்தினி கணேசன், கோகிலா, சுசிலா, ஸ்ரீகாந்த், கபிலன் போன்ற கலைஞர்களும் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

கலாச்சார பாரம்பரிய நடனங்களையும் ரசிக்க வாய்ப்பு கிடைத்ததோடு பொங்கல் வைக்கும் போட்டியிலும் கலந்து கொண்டது மகிழ்ச்சியை தருவதாக நேயர் சந்தியாள் தெரிவித்தார். மின்னல் அறிவிப்பாளர்களின் கலகலப்பான அறிவிப்போடு உரி அடிக்கும் போட்டியும் வெகு சிறப்பாக அமைந்ததாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நேயர் ராமன் தெரிவித்தார்.

மின்னல் ப பண்பலை ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பொங்கல் நிகழ்ச்சிக்கு 1500க்கும் அதிகமான நேயர்கள் கலந்து கொண்டதும், நேயர்களின் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பூச்சோங் நேயர்களின் வரவேற்பு தனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது என்றார்இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணன். மின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம் நேயர்களை மகிழ்ச்சியோடு கொண்டாட வைத்தது..

For more info visit : https://www.facebook.com/RTMMINNALfm/posts/1673607812780436